Sunday, January 8, 2012

கவிஞர் நா.முத்துகுமார் கவிதைகள்

 தூர்

வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்

கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே

சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்

மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

3 comments:

  1. அருமை, அவர் சார்ந்த ஒரு பதிவை என் வலைப்பூவில் (www.vizhiyappan.blogspot.com) எழுதும்போது...

    இந்த கவிதைக்கு ஒரு "இணைப்பு சான்று" தேவைப்பட்டது. உங்களின் இந்தப் பதிவு சரியான இணைப்பாய் உணர்ந்து - உங்கள் அனுமதியோடு - அப்பதிவில் கொடுக்கிறேன்.

    நன்றிகள் பல.

    ReplyDelete